தென்காசி மாவட்டம் வல்லத்தில் ஜமீன் பஞ்சாயத்து அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் சேர்ந்து கொண்டாடிய சமத்துவ பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சிக்கு ஜமீன் பஞ்சாயத்து தலைவர் ஜமீன் பாத்திமா தலைமை தாங்கினார்
நிகழ்ச்சிக்கு தென்காசி ஒன்றிய குழு தலைவர் ஷேக் அப்துல்லா தென்காசி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் திவான் ஒலி ஆகியோர் முன்னிலை வகித்தனர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய துணைத் தலைவர் இறையன்பன் குத்தூஸ் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்
தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகளை ஒன்றிய குழு தலைவர் ஷேக் அப்துல்லா வழங்கினார் நிகழ்ச்சியில் பாரம்பரிய விளையாட்டுகளான கயிறு இழுக்கும் போட்டி பாட்டிலில் நீர் நிரப்புதல் மியூசிக் சேர் ஆகிய விளையாட்டுகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு இறையன்பன் குத்தூஸ் பரிசுகளை வழங்கித் சிறப்பித்தார்
இந்நிகழ்ச்சியில் கோலப்போட்டியில் வெற்றி பெற்ற முத்துச்செல்வி இந்துமதி வேலம்மாள் மாலா சீதாலட்சுமி கனகா ஆகியோர்களுக்கு தலா முதல் இரண்டாம் இடம் மூன்றாம் இட பரிசுகள் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் சாகுல் ஹமீது திவான் மைதீன் ஷேக் தாவுது பஞ்சாயத்து எழுத்தர் சங்கரநாராயணன் உட்பட ஏராளமான பொதுமக்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்