கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
கும்பகோணம் அருகே திருப்பாலைத்துறையில் தனியார் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடிய வெளிநாட்டு தம்பதியர்…
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருப்பாலைத்துறை ஆப்தீன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா காஜா முகையதீன் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பள்ளிவாசல் தலைமை இமாம் முகமது இலியாஸ் மிஸ்பாஹி, பங்குத்தந்தை மரிய பிரான்சிஸ் , பேரூராட்சி நிர்வாகிகள் பூங்குழலி கபிலன் ,பூபதி ராஜா, தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் பிரபாகரன் ,அஜய் சர்மா, மற்றும் பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் வருகை புரிந்த நியூசிலாந்து நாட்டை சேர்ந்த வெளிநாட்டு தம்பதியினர் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு உற்சாகமாக கொண்டாடினர்.
இதில் பள்ளி மாணவ மாணவிகள் யோகா, பட்டிமன்றம் சிலம்பாட்டம்,கரகாட்டம் ஒயிலாட்டம், நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் செய்து காண்போர்களை மெய்சிலிர்க்க வைத்தனர் இவ்விழாவில் மாணவ மாணவிகள் ,ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.