திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் மு. நாவளவன் தலைமையில், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் க. செல்வம், கௌரவ ஆலோசகர் பா. சிவனேசன், துணைத் தலைவர் சிவ. செல்லையன், பொருளாளர் சிங்கு தெரு எஸ். ஆர். ராஜேஷ், அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சோம. மாணிக்கவாசகம், பள்ளிஆசிரிய, ஆசிரியைகள்,மாணவர்கள் கலந்துகொண்டு பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.