விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் RR நகர் பகுதியில் செயல்படக்கூடிய குவைத் ராஜா மக்கள் இயக்கம் சார்பில் தொழில் அதிபர் குவைத் ராஜா துணைவியார், சுபா ஆகியோர் தமிழர் திருநாள் பொங்கல் திருநாளை முன்னிட்டு சுற்று வட்டார பகுதியில் உள்ள கிராமங்களை சேர்ந்த ஏழை எளிய 1500 க்கும் மேற்ப்பட்ட பொதுமக்களுக்கு பொங்கல் பரிசாக கரும்பு வேஷ்டி சேலை மற்றும் 200 ரூபாய் கொடுத்து பொங்கல் வாழ்த்துக்கள் கூறியதால் பெற்றுக்கொண்ட அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த நிகழ்வு கடந்த 15 வருடங்களாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது