நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி சார்ந்த கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ச. உமாவிடம், முன்னாள் அமைச்சர் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் P. தங்கமணி வழங்கி அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனகேட்டுக்கொண்டார். அவருடன் இணைந்து பரமத்திவேலூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் S. சேகர், தமது பகுதி கோரிக்கைகளை குறித்து மாவட்ட ஆட்சியிடம் மனு அளித்தார்.இதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் P. தங்கமணி,
குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 9 ஊராட்சிகளை பள்ளிபாளையம் நகராட்சியுடன் விதிமுறைகளுக்கு புறம்பாக இணைப்பதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சட்டமன்றத்தில் செயலாளரை சந்தித்து மனு அளித்திருந்தோம். கேள்வி நேரத்தின்போது, வேளாண் விளை நிலங்களாக இருக்கும் இடங்களை நகராட்சி
பேரூராட்சி ஆகியவற்றுடன் இணைக்க மாட்டோம் என அத்துறை அமைச்சர் கூறியிருந்தார்.
செயலாளரும் அவ்வாறே தெரிவித்திருந்தார். மாவட்ட ஆட்சியரிடம் கடிதம் கொடுத்துவிட்டால் பரிசீலிப்பதாக கூறியுள்ளனர். மாணிக்கநத்தம் பகுதியில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதாக மாவட்ட நிர்வாகம் முயற்சி செய்தபோது அது அங்குள்ள பொதுமக்களால் தடுக்கப்பட்ட காரணத்தால், அந்த ஓவியம்பாளையம் பகுதியில் அமைப்பதற்கு தற்போது முயற்சி எடுத்து வருகின்றனர்.
இப்பகுதியில் முழுவதும் மக்கள் குடியிருப்பு வேளாண் விளை நிலங்கள், நீர் நிலைகள் உள்ளதால் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை இப்பகுதியில் அமைத்தால், பொதுமக்கள், கால்நடைகள், நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். எனவே இந்த கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலையை வேறு பகுதியில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ளோம். இவற்றை அரசுக்கு அனுப்பி வைப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளா.