திருவாரூர் செய்தியாளர்
வேலா செந்தில்
திருவாரூர் நகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் தலைமையில் வெகு விமரிசையாக நடைபெற்றது .
திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் என்று சமத்துவ பொங்கல் விழா திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் தலைமையில் நடைபெற்றது இதில் பொங்கள் வைத்து வழிபாடு செய்தனர் தொடர்ந்து நகராட்சியில் பணிபுரியும் 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கு புத்தாடைகள், கரும்பு வாழைப்பழம், மற்றும் ரொக்கப் பணம் ஆகியவற்றை சட்டமன்ற உறுப்பினர் பூண்டி. கலைவாணன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில், திமுக நகர செயலாளர் பிரகாஷ், மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் ஏறாளமானோர் பங்கேற்றனர்