மதுரை ,காந்தி மியூசியத்தில் பொங்கல் விழாவினை முன்னிட்டு இத்தாலி நாட்டைச் சேர்ந்த உயிரியல் நிபுணர் மற்றும் சைவ சித்தாந்தம் மற்றும் ஜீவசமாதிகள் ஆர்வலர் டேனியல் கிமுராய் தலைமை யில் 34 பேர் கொண்ட குழுவினர் மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் வருகை தந்தனர் .
காந்தியடிகளின் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புடைய டேனியல் கிமுராய் திருமந்திரத்தில் உள்ள 3000 பாடல்களை இத்தாலி மொழிக்கு மொழிபெயர்க்கும் மாபெரும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இத்திட்டம் வெற்றி பெற காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தில் உள்ள பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பொங்கல் வழிபாட்டினை நடத்திய அவர்கள் அனைவருக்கும் பரிவட்டம் கட்டி சிறப்பு செய்யப் பட்டது. காந்தி நினைவு அருங்காட்சியத்திற்கு உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காந்தி நினைவு அருங்காட்சியச் செயலாளர் கே. ஆர். நந்தாராவ் வரவேற்றார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மூத்த சுற்றுலா வழிகாட்டி மாரிமுத்து செய்திருந்தார். இந்த நிகழ்வில் காந்தி நினைவு அருங்காட்சியப் பணியாளர்கள் கதிரேசன் , ஜெயக்குமார் கலந்து கொண்டனர்