பெருமாள் கோவிலில் நடைபெற்ற ஆண்டாள் திருக்கல்யாணம் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருவொற்றியூர் காலடிப்பேட்டை 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் மார்கழி மாதம் கடைசி நாளான இன்று ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.
கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோவில் வாயிலில் நான்கு கால் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஆண்டாள் திருமணத்தில் பங்கேற்று முகூர்த்த தேங்காபிரசாதமாகி வாங்கி சென்றால் திருமணம் நிச்சயம் கைக்கூடும் என்பதால்.
வெளிப்பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து முகூர்த்த தேங்காய் வாங்கிச் சென்றனர்.
முன்னதாக விசேஷ மாலை அலங்காரத்தில் உற்சவர் பவள வண்ண பெருமாள் மணக்கோளத்தில் ஆண்டாள் நாச்சியார் அலங்காரத்தில் எழுந்தருள பட்டாச்சாரியார்கள் மாலை மாற்றி கண்ணூஞ்சல் ஆடு என்ற பாடல்களை பாடி நடனம் ஆடினர் இதனை அடுத்து ஆண்டாளுக்கு திருமாங்கல்யம் கட்டி திருமண வைபவம மிக சிறப்பாக நடைபெற்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *