திருவாரூரில் திருவள்ளுவர் தினத்தையொட்டி திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் திருவள்ளுவர் திருவுருவப்படத்திற்கு நகர செயலாளர் பிரகாஷ் தலைமையில் மாலை அணிவித்த மரியாதை செலுத்தி மாணவ மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது .
உலகப் பொதுமறை நூலான திருக்குறளை எழுதிய திருவள்ளுவரின் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது இதன் தொடர்ச்சியாக திருவாரூர் திமுக நகர கழக அலுவலகத்தில் திருவள்ளுவர் தினத்தையொட்டி திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் திமுக நகர செயலாளர் பிரகாஷ் தலைமையில் திருவள்ளுவரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து பள்ளி மாணவர்கள் திருக்குறள் ஒப்புவித்தனர் மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட அமைப்பாளர் கருணாநிதி கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர் கலியபெருமாள் தலைவர் மணி, துணை தலைவர் கலைச்செல்வம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.