நாமக்கல்லில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டம். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்…
மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல்லில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்தனர்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாநிலம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. அதே போல நாமக்கல் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக மாற்றுத்திறனாளிகள் 60- க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்..
மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி தொகையை ஆந்திர மாநிலம் போல் மாதம் 6 ஆயிரம் ரூபாய் முதல் ரூ. 15 ஆயிரம் வரை உயர்த்தி வழங்க வேண்டும், உதவித்தொகையை மாற்றுத் திறனாளிகள் துறையின் மூலமே அனைவருக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி. மாற்றுத்திறனாளிகள் முழக்கங்களை எழுப்பி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.