புலிகள் எண்ணிக்கை குறைந்து வருவதே மான்களின் பெருக்கத்திற்கு காரணம். ராஜபாளையத்தில், மாவட்ட ஆட்சியர் ஜெசீலன் பேச்சு!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வனத்துறை, நீலகிரி வரையாடு திட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம், அரும்புகள் அறக்கட்டளை மற்றும் ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி இயற்கை கழகம் இணைந்து, விழிப்புணர்வு கலைப்பயணம் துவக்க விழா நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜன்,இ,வ,ப தலைமையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர்வீ.ப. ஜெயசீலன் கொடி அசைத்து பயணத்தை துவக்கி வைத்தார்.
ராஜபாளையம் வனச்சரக அலுவலர் கார்த்திகேயன் வரவேற்றுப் பேசினார். ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ராமகிருஷ்ணன்வாழ்த்திப் பேசினார்.
விழாவில் அரும்புகள் குழுவினரின் நீலகிரி வரை ஆடுகள் விழிப்புணர்வு குறித்த கலை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் பேசும்போது கூறியதாவது:
” தற்போதைய சூழலில் பல்வேறு பிரச்சனைகள் விவசாயிகளுக்கு ஏற்பட்டு வருகிறது. மயில்கள் தொந்தரவு அதிகமாக இருந்து வருகிறது. பன்றிகள் கூட்டம் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. மான்கள் கூட்டமும் அதிகமாக இருந்து வருகிறது. இது போக நகர் பகுதியில் தெரு நாய்களின் தொல்லைகளும் அதிகமாக இருந்து வருகிறது.
மான்களின், இனப்பெருக்கம் அதிகமாக ஏற்பட்டு அவைகள் உணவுக்காக, வனப்பகுதியைவிட்டு, வெளியேறி,விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கும் வருவது அதிகரித்துள்ளது,
இதற்கு காரணம் இயற்கை சமநிலை மாறி வருவதே ஆகும். மான்கள் இனப்பெருக்கம் பெரிய அளவில் நடைபெற்று வருவதற்கு காரணமே புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருவது தான். புலிகளை பாதுகாக்க பல்வேறு சட்டங்கள்,அரசு,வனத்துறை சார்பில் இயற்றப்பட்டுள்ளது. புலிகள் எண்ணிக்கையில் கூடவில்லை. இதற்கு இயற்கை சமநிலை மிகவும் அவசியமாகிறது. நீலகிரி வரையாடுகள் சர்வதேச ரீதியில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இது ஒரு அழிந்து வரும் உயிரினமாகும். உலகம் முழுவதுமே இயற்கையைப் பாதுகாக்க வேண்டியது அவசியம். இனி வரைஆடுகள், புலிகள் பாதுகாக்கப்பட வேண்டும்.நீங்கள் தற்போது,கல்லூரியில் படிக்கிறீர்கள்,வரும் காலத்தில்,பல்வேறு துறைகளில்,பணிபுரியும்,நிலை
,வரும்,ஆகவே அனைவரும், இதனை மனதில்கொண்டு இயற்கை வளங்களை,பாதுகாக்க உறுதி ஏற்கவேண்டும்,தமிழ்நாடு முழுவதும் இதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது” – இவ்வாறு மாவட்ட ஆட்சியர்
வீ.ப. ஜெயசீலன் பேசினார். இறுதியில்,அனைவரும்,
உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்,
வனச்சரக அலுவலர்கள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள், ராஜபாளையம் ராஜக்கள் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். முடிவில் அரும்புகள் அறக்கட்டளை நிறுவனர் ராஜ மதிவாணன் நன்றி கூறினார்.