எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பாக கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே சாலை மறியல் கைது செய்த போலீசார் :-
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பாக சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையை ஆந்திரா மாநிலத்தில் வழங்குவது போன்று ரூ.6000,ரூ.10,000 ,ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்குங்கள் மாற்றுத்திறனாளிகள் துறை மூலம் உதவி தொகை அனைவருக்கும் வழங்கக்கோரியும் ,ரூபாய் 1500 மற்றும் 2000 உதவி தொகைக்கு விண்ணப்பித்து உதவி தொகை கிடைக்காமல் நீண்ட காலமாக காத்திருக்கும் அனைவருக்கும் உடனடியாக உதவி தொகையை வழங்கிட கோரியும், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் 50% 4 மணி நேர பணி என்ற பழைய நிலையை தொடர கோரியும், 8 மணிநேர பணி களத்தில் இருக்க வேண்டும் என்ற புதிய உத்தரவை திரும்ப பெற கோரியும், அனைவருக்கும் முழுமையாக வேலை வழங்க உத்தரவாதம் கொடுக்கக் கோரியும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சீர்காழி கோட்டாட்சியர் அலுவலக எதிரே நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் மத்திய மாநில அரசுக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் கண்டன கோஷங்களை எழுப்பினர் பின்பு அனைத்து மாற்றுத்திறனாளிகளையும் காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.