தூத்துக்குடி மாவட்டத்தில் நாளுக்கு நாள் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் வேகமாக செல்வதால் விபத்து ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டு வந்தது அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் தூத்துக்குடி நகர துணை காவல் கண்காணிப்பாளர் மதன் மேற்பார்வையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள் தலைமையில் போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளர் சதீஷ். வெங்கடேசன் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் ஆங்காங்கே இருசக்கர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்
இந்த நிலையில் இன்று பாலை ரோட்டில் உள்ள தனியார் கல்லூரி முன்பு போக்குவரத்து உதவி ஆய்வாளர் சதீஷ் தலைமையில் போக்குவரத்து காவல்துறையினர் இருசக்கர வாகன சோதனையில் ஈடுபட்டனர்
அப்போது வாகன சோதனையில் 14 இரு சக்கர வாகனம் பிடிபட்டது அதற்கான அபதார தொகை ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டது கடந்த 10 நாட்களாக போக்குவரத்து காவல்துறையினர் தொடர்ந்து இரு சக்கர வாகன சோதனை ஈடுபட்டு வருகின்றனர் மீண்டும் இன்று கல்லூரி முன்பு வாகன சோதனை செய்யப்பட்டது தற்போது இரு சக்கர வாகன சோதனை அதிக அளவில் நடைபெறுவதால் பொதுமக்கள் காவல்துறையினரை பாராட்டி வருகின்றனர்