R. கல்யாண முருகன் செய்தியாளர் விருத்தாசலம்
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருத்தாசலத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஸ்ரீமுஷ்ணம் திட்டக்குடி வேப்பூர் பகுதியைச் சார்ந்த ஓய்வூதியர்கள் தங்களுக்கு நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மாவட்டத் தலைவர் அருணகிரி தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
ராஜேந்திரன் சுப்பிரமணியன் முருகேசன் மற்றும் மாவட்டத் துணைத் தலைவர்கள் ஜெயவேல் சிவபாலன் முன்னிலை வகித்தனர்.
வாழ்த்துறையை ஓய்வு பெற்ற துணை வட்டாட்சியர் பாண்டியன் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் கேசவன் வாழ்த்துரை வழங்கினர்.
தமிழக முதலமைச்சர் அவர்கள் தேர்தல் கால வாக்குறுதி படி புதிய ஓய்வு திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த கோரியும் விருத்தாசலத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவித்திடக்கோரியும்.வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்க கோரியும் விருப்பம் உள்ளவர்கள் மட்டும் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்றும் மத்திய அரசு வழங்குவதை போன்று மருத்துவப்படி ஆயிரம் ஆக உயர்த்தி வழங்கக் கூறியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்