விருதுநகர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கணிப்பாய்வு குழு (DISHA COMMITTEE) கூட்டம் நேற்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தலைமையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் , அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர்கே.நவாஸ்கனி பங்கேற்று திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து கலந்துரையாடினார்
மேலும் கூட்டத்தில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் ஜி அசோகன், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஆர் சீனிவாசன் மற்றும் அனைத்துத் துறை அரசு அதிகாரிகளும் பங்கேற்றனர் அரசு திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.