ஏ பி பிரபாகரன். பெரம்பலூர். செய்தியாளர்.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம், மேலமாத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில்,”தேர்வை வெல்வோம்”
10-ம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டி வினா விடை தொகுப்பினை” குன்னம் சட்டமன்ற உறுப்பினரும், போக்குவரத்து துறை அமைச்சருமான சா.சி.சிவசங்கர்,
தனது சொந்த செலவில் வழங்கினார்
இந்த நிகழ்வில் ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆசிரியர் பெருமக்கள், கட்சி நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர். இதேபோல் கொட்டரை அரசு உயர்நிலைப் பள்ளியிலும் வழிகாட்டி வினா விடை தொகுப்பினை மாணவர்களுக்கு அமைச்சர் சிவசங்கர் வழங்கினார் நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்குமார் உட்பட ஏராளமானவர் கலந்து கொண்டனர்.