திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயிலில் இத்திருக்கோயிலுக்கு சட்டமன்ற அறிவிப்பு 2023- 2024 அறிவிப்பு எண் 13 ன்படி ரூபாய் 59 லட்சம் மதிப்பீட்டில் திருக்கோயில் நிதியிலிருந்து புதியதாக சண்டிகேஸ்வரர் தேர் திருப்பணி செய்யும் பணிக்கான பூஜையுடன் துவங்கப்பட்டது .
இந்நிகழ்ச்சியில் ஸ்தபதி மதுரை மணிகண்டன், அறங்காவலர் குழுத் தலைவர் மு செல்லையா அவர்கள், அறங்காவலர் குழு உறுப்பினர் சொனா வெங்கடாசலம் அவர்கள் ,கோவில் கண்காணிப்பாளர் முருகன் அவர்கள், மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.விரைவில் தேர் பணி மிகச் சிறப்பாக முடிவுக்கு வரும் என பக்தர்களும் கோயில் நிர்வாகத்தினரும் பெருமிதத்தோடு தெரிவித்தனர்.