திண்டுக்கல், M.V.M.கல்லூரி அருகே மினி பேருந்தில் அதிக மாணவிகளை ஏற்றுக் கொண்டு படியில் பயணம் செய்வதாக தொடர்ந்து புகார் வந்தது.
இதையடுத்து திண்டுக்கல் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் இளங்கோ அப்பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டார்.அப்போது அரசு பேருந்து மற்றும் மினி பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட அளவு மாணவிகளை ஏற்றி செல்ல அனுமதித்தார்.
மேலும் விதிகளை மீறிய 5 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.தொடர்ந்து இவ்வாறு செயல்பட்டால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை செய்துள்ளார்.