செங்கல்பட்டு மாவட்டம், படாளம் அருகே உள்ள கற்பக விநாயக மருத்துவக் கல்லூரி சிறந்த கல்வியையும் சிறந்த மருத்துவத்தையும் மருத்துவ வல்லுநர்களையும் உருவாக்கி வருகிறது.
இக்கல்லூரி சார்பில் சுகாதாரம், மனிதநேயம், சமூக மருத்துவம், குறித்த சர்வதேச மருத்துவ பட்டதாரிகள் கருத்தரங்கம் மற்றும் கற்பக விநாயகா செவிலியர் கல்லூரியின் விளக்கேற்றும் நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி நிர்வாக இயக்குனர் அண்ணாமலை ரகுபதி தலைமை தாங்கினார்.
கல்லூரி முதல்வர் சுபலா சுனில் விஸ்வாஸ்ராவ் அனைவரைரும் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக உலக மருத்துவக் கல்விக் கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் டாக்டர் ரிக்கார்டோ லியோன் போர்கெஸ், ஐரோப்பாவில் உள்ள மருத்துவப் பள்ளிகளின் சங்கத் தலைவர் பேராசிரியர் டாக்டர் ஹார்ம் பீட்டர்ஸ், போர்ச்சுக்களில் ஸ்கூல் ஆஃப் மெடிசின், லிஸ்பன் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் டாக்டர். மதலோனா பாட் ரிசியோ, ஐரோப்பாவில் மருத்துவக் கல்விக்கான முன்னாள் தலைவர் சங்கம். டாக்டர் ரஸ்ஸல் டிசோசா, ஆசிய பசிபிக் பிரிவுத் தலைவர், கல்வித் துறை இயக்குநர் யுனெஸ்கோ பயோஎதிக்ஸ், டாக்டர் பிரின்சி பலாட்டி, தென்னிந்திய யூனெஸ்கோ தலைவர் பயோஎதிக்ஸ், மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவர் மற்றும் நுகர்வோர் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற டாக்டர். விவேக் மேடி ஆகியோர் கலந்து கலந்து கலந்து கொண்டு நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து செவிலியர் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இதனை தொடர்ந்து புளோரன்ஸ் நைட்டேங்கேல் அம்மையார் செவிலியராக பணிபுரிந்த வரலாற்றின் கலை நிகழ்ச்சிகளை மாணவ மாணவிகள் மேடையில் நடித்துக் காட்டினர் இதனை வெளிநாட்டு சிறப்பு விருந்தினர் கண்டு ரசித்தனர். மேலும் சிறந்த மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரி மாணவர்களின் சர்வதேச மருத்துவ பட்டதாரிகள் கருத்தரங்கு நடைபெற்றது அதில் சிறப்பு விருந்தினர்கள் மருத்துவ மாணவ மாணவிகளுக்கு சர்பதேச மருத்துவம் சர்வதேச மருத்துவ சட்டங்கள் மருத்துவர்கள் பாதுகாப்பு மருத்துவத்தின் நவீனம் ஆகியவை குறித்து விளக்கம் அளித்து பேசினர்.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவ இயக்குனர் டாக்டர் சத்திய நாராயணன், மருத்துவ மேற்பார்வையாளர் டாக்டர் கண்ணகி, பல் மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் மதன்மோகன், பல் மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர். பாலகுகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி இறுதியாக செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர் கோமளவல்லி நன்றி உரையாற்றினார்.