எபி பிரபாகரன். பெரம்பலூர். செய்தியாளர்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட நூத்தப்பூர் ஊராட்சியில் உள்ள நெற்குணம் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்கக் கோரி மாவட்ட ஆட்சிதலைவரிடம் கிராம மக்கள் சார்பில் மனு அளித்துள்ளனர்.
இந்நிகழ்வில் பெரம்பலூர் ரோவர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் வரதராஜன், நம்மாழ்வார், மதிமுக மாவட்ட செயலாளர் ஜெயசீலன், திரைப்பட நடிகரும், சமூக ஆர்வலருமான ரமேஷ், செல்வம், மூர்த்தி, சுப்புராஜ், சீனிவாசன், கிருஷ்ணசாமி, கந்தசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.