திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் மண்ணின் மைந்தர், முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு, இளைஞர்களின் எழுச்சி நாயகர், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள், திராவிட மாடல் அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் திருவாரூர் மாவட்ட திமுக இலக்கிய அணி தெருமுனை பிரச்சார கூட்டம் வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயம் எதிர்புறம் உள்ள சீரணி கலையரங்கத்தில், வலங்கைமான் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வீ. அன்பரசன் தலைமை தாங்கினார்.
வலங்கைமான் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நரசிங்கமங்கலம் கோ. தட்சணாமூர்த்தி, வலங்கைமான் நகர திமுக செயலாளர் பா சிவனேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தலைமைக் கழக பேச்சாளர் கோ. தட்சிணாமூர்த்தி, மாவட்டத் துணை அமைப்பாளர்கள் பால.முத்து, ஜாகிர் உசேன், தி. ப. செல்லத்துரை, இளம் பேச்சாளர் செல்வி இரா. கனிமொழி, ஒன்றிய அமைப்பாளர் ஏ. பழனிவேல் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். நிகழ்ச்சியில் வலங்கைமான் பேரூராட்சி மன்ற தலைவர் ஷர்மிளா சிவனேசன், துணைத் தலைவர் க. தனித் தமிழ்மாறன், வலங்கைமான் நகர திமுக அவைத்தலைவர் சோம.மாணிக்கவாசகம், நகர பொருளாளர் புருஷோத்தமன், மாவட்ட பிரதிநிதி ரவிச்சந்திரன், ஒன்றிய பிரதிநிதிகள் சிங்குத்தெரு எஸ்.ஆர். ராஜேஷ், வி. சி. ராஜேந்திரன், க. செல்வம் உட்பட பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், 6-வது வார்டு திமுக பொருளாளர் கோ. சண்முகசுந்தரம் யாதவ், மற்றும் மாவட்ட, ஒன்றிய,நகர, கிளைக் கழக கட்சி நிர்வாகிகள், அணி பொறுப்பாளர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஆவூர் கடைவீதியில் தெருமுனைப் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.