திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பொதுப்பணி துறை சார்பில் பல்லடம், கரடிவாவி, கணபதிபாளையம், காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனை ஆகிய பகுதிகளில் புதிய வகுப்பறைகள் கட்டுதல், கீழ்நிலை நீர் தேக்க தொட்டி திறப்பு விழா,

தலைமை மருத்துவமனை மேம்படுத்துதல் என சுமார்17.59 கோடி மதிப்பீட்டில் துவக்க விழா இன்று நடைபெற்றது. பல்லடம் பெண்கள் மேல்நிலை பள்ளியில் பூமி பூஜையானது நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு பே சாமிநாதன், மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ், நகராட்சி தலைவர் கவிதா மணி ராஜேந்திர குமார், பல்லடம் திமுக நகர செயலாளர் ராஜேந்திர குமார், திருப்பூர் மாவட்ட இந்து சமய அறநிலைத்துறை அறங்காவலர் குழு தலைவர் கீர்த்தி சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு பி சாமிநாதன் பேசுகையில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான தேர்தல் குறித்து துணை முதல்வர் உதயாநிதி ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு செய்து வருகிறார் எனவும் மாநகராட்சி உடன் ஊராட்சிகளை இணைப்பது நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைப்பது வார்டு பரிசீலனை செய்வது போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது

விரைவில் தமிழக முதல்வர் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து முடிவு செய்வார் எனவும் பெரியார் குறித்து சீமான் தொடர்ச்சியாக பேசி வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகையில் எனக்கு வேலைகள் அதிகம் உள்ளது சீமானுக்கு வேலையில்லை அவரைக் குறித்து கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது எனவும் டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து செய்யப்படும் என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டை வரவேற்பதாகவும் பாலியல் வன்கொடுமை சட்ட திருத்தத்திற்கு தமிழக ஆளுநர் ஆர் என் ரவி ஒப்புதல் அளித்திருப்பதை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *