பிரபு தாராபுரம் செய்தியாளர்
செல்:9715328420
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை
சாலை பராமரிப்பு ஊழியர்கள் (Unskilled) சங்கம் சார்பில் கோட்ட தலைவர்.ஜோ.பீட்டர் தலைமையில் மாநில பொருளாளர் ஈஸ்வரமூர்த்தி முன்னிலையில் அலங்கியம் சாலையில் உள்ள கோட்ட-பொறியாளர்.அலுவலகம் முன்பு திமுக திராவிட மாடல் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில்
சாலைப்பணியாளர்களின் 41-மாத பணி நீக்க காலத்தை கருத்தியலான ஊதியம் மற்றும் ஓய்வூதிய பலன்களுக்கு கணக்கிட வேண்டும் என்றும்.
சென்னை உயர்நீதி மன்றம் 23.10.2024 அன்று வழங்கிய தீர்ப்பினை அமுல்படுத்திட வலியுறுத்தியும்
மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிடப்பட்ட அரசாணை 140-னை ரத்து செய்திடுட கோரியும் உள்ளிட்ட 16- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் போது:-கோட்டச் செயலாளர் செந்தில்குமார். மாவட்ட தலைவர் சாந்தி. மாநிலச் செயலாளர் ரீட்டா. வட்டக்கலை செயலாளர் ராஜு. மாநில இணை ஒருங்கிணைப்பாளர் நவீன்.மாநில தணிக்கையாளர் பால ராஜசேகர். மாவட்ட செயலாளர் தமயந்தி உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.