இரா.பாலசுந்தரம்-செய்தியாளர்,திருவாரூர்
திருவாரூரில் திருநீலகண்ட நாயனார் குருபூஜை
திருவாரூர் பெரிய கோவில் சன்னதி தெருவில் உள்ள அருள்மிகு மங்களாம்பிகை அம்மன் சமேத திருநீலகண்டேஸ்வரர் ஆலயத்தில் இன்று 63 நாயன்மார்களின் ஒருவரான திருநீலகண்ட நாயனாருக்கு தை மாத விசாக நட்சத்திரத்தில் குருபூஜை விழா நடைபெற்றது. இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.பின் அனைவருக்கும் அன்னதானம் நடைபெற்றது.