எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அருகே பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம் முருகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த பூம்புகார் வானகிரி நெப்பத்தூர் உள்ளிட்ட 18 கிராமங்களில் சம்பா சாகுபடி செய்த நெற்பயிர்கள் பருவம் தவறி பெய்த மழையினால் சாய்ந்து பாதிக்கப்பட்டது . இந்நிலையில் இன்று மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன் பாதிக்கப்பட்ட பயிர்களை வயல்வெளிக்கு சென்று நேரில் ஆய்வு செய்தார் பின்னர் தமிழக முதல்வரிடம் எடுத்துரைத்து தங்களுக்கான இழப்பிட்டுத் தொகையை பெற்று தருவதாகவும் உறுதி அளித்தார்

ஆய்வின்போது திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் முத்து மகேந்திரன் ஜி என் ரவி மற்றும் கிழக்கு ஒன்றிய செயலாளர் பஞ்சுகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்