விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. கோட்டாட்சியர் சையத் மெஹ்மூத் தலைமை தாங்கினார். துணை வட்டாட்சியர் முருகேஸ்வரி முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் சுரேஷ்குமார் வரவேற்றார். இதில் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு, கணினி இயக்குனர் சுரேஷ், பேராசிரியர்கள் கருணாநிதி, ஹெலன் ரூத் ஜாய்ஸ், தமிழ்வேல், சுப்பிரமணியன் மற்றும் மாணவர்கள், கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டு விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் இருந்து பேரணியாக புறப்பட்டு விருத்தாசலம் பஸ் நிலையம் வரை சென்று அவசியம் நூறு சதவீத வாக்களிக்க வேண்டும், ஓட்டுக்கு பணம் வாங்கக்கூடாது என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.