பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அனுமதியின்றி அன்னதானம் வழங்கினால் ரூ.1000 அபராதம்”
திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து வரும் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் ஒவ்வொரு வருடமும் முருக பக்தர்களால் வழங்கப்பட்டு வருகிறது.அன்னதானம் வழங்கும் போது பிளாஸ்டிக் பையுடன், பிளாஸ்டிக் சார்ந்த உணவு பொருட்கள் அடங்கிய டப்பாக்களை பயன்படுத்தி அதனை அப்புறப்படுத்தாமல் சாலை ஓரங்களிலும், விவசாய நிலங்களில் அப்படியே விட்டு செல்கின்றனர்.
இதனால் சுற்றுபற சூழல் மாசடைதல் போன்ற பல விளைவுகளை ஏற்படுத்தும் காரணத்தினால் அதனை முழுமையாக கட்டுபடுத்த உணவு பாதுகாப்புத்துறையின் அனுமதி இல்லாமல் அன்னதானம் வழங்க கூடாது .அப்படி வழங்கினால் ரூ.1000 அபராதமும்,கட்டாயம் அனுமதி பெற வேண்டும் என்று திண்டுக்கல் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அன்னதானம் வழங்குபவர்கள் உணவு பாதுகாப்புத் துறையிடம் அனுமதி பெற வேண்டும்.அன்னதானம் வழங்க பிளாஸ்டிக் பைகள் உபயோகப்படுத்தக் கூடாது – உணவு பாதுகாப்புத் துறை
அன்னதானம் வழங்கிய பின் சம்பந்தப்பட்ட இடத்தை முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும் என மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையினர் அறிவிப்புடன்,பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வரும் பிப்ரவரி 11ஆம் தேதி தைப்பூசத் திருவிழா நடைபெறுவதால் முன் அறிவிப்பாக தெரிவித்துள்ளனர்.