எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் சவுடுமண் லாரிகள் மற்றும் பேருந்தை சிறைப்பிடித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீன் பிடி துறைமுகம் அமைந்துள்ளது.சீர்காழி தொடுவாய் பிரதான சாலையில் மீன்பிடி துறைமுகம் செல்லும் வழியில் சிறு பாலம் இருந்தது. இந்த பாலம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மழையினால் சேதமடைந்து பெரிய குழாய் அமைத்து தற்காலிகமாக பால அமைத்து மீனவர்களும் பொது மக்களும் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக முன்பாக அப்பகுதியில் நான்கு வழிச்சாலைக்கு சவுடு மண் குவாரியிலிருந்து மண் ஏற்றிக்கொண்டு நாள் ஒன்றுக்கு 500க்கும் மேற்பட்ட லாரிகள் சென்று வருவதால் சிறு குழாய்ப்பாலம் முழுவதுமாக சேதம் அடைந்தது, சேதம் அதிகமாகி குழாய் பாலம் முற்றிலுமாக உடைந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து திருமுல்லை வாசல் மீனவர் கிராமத்தினர் மற்றும் ஊராட்சியை சேர்ந்த 200க்கு மேற்பட்ட ஆண்கள்,பெண்கள் அவ்வழியே நான்கு வழிச்சாலைக்கு சவுடு மண் ஏற்றி வந்த லாரிகள் மற்றும் பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் டென்ட் கொட்டகை அமைத்து அதிகாரிகள் வரும் வரை காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
உடனடியாக இப்பகுதியில் நிரந்தர பாலம் அமைத்து தர வேண்டும் எனவும் சவுடு மண் குவாரிகளை நிரந்தரமாக மூடக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து வட்டாட்சியர் அருள் ஜோதி சீர்காழி காவல் ஆய்வாளர் புயல் பாலச்சந்திரன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் இது தொடர்பாக கூறிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.