பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

பாபநாசத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் 76 ஆவது குடியரசு தின விழா-மாநில செயற்குழு உறுப்பினர் ஜி .சந்திரசேகர மூப்பனார் பங்கேற்பு…
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் 76 வது குடியரசு தின கொடியேற்று விழா தஞ்சை மேற்கு மாவட்ட தலைவர் என்.கே. சேகர் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி .சந்திரசேகர மூப்பனார் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் இதில் தஞ்சை கிழக்கு மாவட்ட தலைவர் பி.எஸ். சங்கர் ,
பாபநாசம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரும் பாபநாசம் தெற்கு வட்டாரத் தலைவருமான எஸ்.சேதுராமன்,மாவட்டத் துணைத் தலைவர்கள் மாஸ்கோ, ரமேஷ்,குடந்தை மாநகர தலைவர் அருண்குமார், மகளிரணியினர் மற்றும் மாநில, மாவட்ட ,வட்டார, நகர நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.