கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520.
பல்லடம் அருகே 63 வேலம்பாளையத்தில் செயல்படாத கல் குவாரியில் துணி துவைக்க சென்ற தாய் மற்றும் இரண்டு மகள்கள் உட்பட மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு..
உடலை மீட்கும் பணியில் பல்லடம் தீயணைப்புத்துறை மற்றும் மங்கலம் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்…
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 63 வேலம்பாளையம் வாஷிங் நகர் பகுதியில் வசித்து வரும் ராஜா என்பவரின் மனைவி ரேவதி மற்றும் அவரது இரண்டு மகள்கள் பிரகன்யா(7), பிரகாஷினி(9) மற்றும் ரேவதியின் சகோதரி தீபா மற்றும் அவரது குழந்தைகள் ரிதன்யா, ரித்திகா ஆகியோர் அதே பகுதியில் 9 வருடங்களாக செயல்படாத நிலையில் உள்ள பாறை குழியில் துணி துவைப்பதற்காக சென்றுள்ளனர்
அப்போது பிரகன்யா மற்றும் பிரகாஷினி ஆகிய இரண்டு குழந்தைகளும் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியதை கண்ட ரேவதி மற்றும் தீபா அவர்களை காப்பாற்றுவதற்காக உள்ளே குதித்துள்ளனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகே இருந்த கார்த்திக் மற்றும் ரவி ஆகிய இருவரும் தீபா மற்றும் ரேவதி ஆகியோரை மீட்டபோது ரேவதி பரிதாபமாக உயிரிழந்தார் தகவல் அறிந்த சம்பவ இடம் விரைந்து வந்த மங்கலம் காவல்துறையினர் மற்றும் பல்லடம் தீயணைப்பு துறை வீரர்கள் உயிர் இழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்
இதில் உயிரிழந்த தாய் ரேவதியின் உடல் மீட்கப்பட்டு உடல் கூறு ஆய்வுக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது மேலும் ஒரு மணி நேரம் கழித்து உயிரிழந்த குழந்தை பிரகாசியன் உடல் மீட்கப்பட்டுள்ளது மேலும் ஒரு குழந்தையின் உடலை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதே பகுதியில் ஏராளமான கல்குவாரிகள் செயல்படாமல் உள்ள நிலையில் கடந்த வருடம் 3 குழந்தைகள் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.