தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 263 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை வேண்டி புதிய வீட்டுமனை பட்டா வேலைவாய்ப்பு மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 263 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் பொது மக்களின் கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்
முன்னதாக மாற்று திறனாளிகள் நலத் துறையின் சார்பில் 11445, மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள் 1 நபருக்கும் தலா 16199 மதிப்பிலான ஸ்மார்ட் போன் 16 நபர்களுக்கு என மொத்தம் 17 மாற்று திறனாளிகளுக்கு 2 லட்சத்து 76 ஆயிரத்து 629 க்கான மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா வழங்கினார்
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா ஜெயபாரதி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்து மாதவன் தனித் துணை ஆட்சியர் பயிற்சி சாந்தி மாவட்ட வழங்கல் அலுவலர் மாரிச்செல்வி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் வெங்கடாச்சலம் கலால் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் இரா நல்லதம்பி வெகு சிறப்பாக செய்திருந்தார்