எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சீர்காழி அருகே மசாலா ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி கட்டுப்பட்டை இழந்து பள்ளத்தில் சாய்ந்து தீ விபத்து.தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த அரசூர் நான்கு வழிச்சாலையில் ஈரோட்டை சேர்ந்த மசாலா கம்பெனியிலிருந்து மசாலா பொருட்களை சிதம்பரத்தில் இறக்கி விட்டு மயிலாடுதுறை செல்லும் வழியில் அரசூர் நான்கு வழிச்சாலையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி சாலையோர வாய்க்காலில் விழுந்து தீ பற்றி எறிந்தது.
அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் அரை மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.கண்டெய்னர் லாரி ஓட்டுநர் பாலசுப்ரமணியன் சிறு காயங்களுடன் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.மேலும் கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.