தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளராக ஆயிரப்பேரி கே.சுந்தர் நியமனம்
தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளராக ஆயிரப்பேரி கே.சுந்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ் செல்வ மோகன்தாஸ் பாண்டியனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக வழக்கறிஞர் அணி புதிய நிர்வாகிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி நியமனம் செய்துள்ளார். அதன்படி தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக வழக்கறிஞர் அணி தலைவராக எம். செல்லத்துரை பாண்டியன் மாவட்ட துணைத் தலைவர்களாக அடைச்சாணி எம் காந்திமதிநாதன், நல்லூர் பி.சுப்பையா, ஆகியோரும் மாவட்ட செயலாளராக தென்காசி எஸ்.சிவக்குமார், மாவட்ட இணைச் செயலாளர்களாக மேலகரம் எம். செல்லத்துரை பாண்டியன், வாடியூர் எஸ்.ராமச்சந்திரன், ஆயிரப்பேரி கே சுந்தர், தெற்கு மடத்தூர் ஆர்.ரஞ்சித்குமார், ஆவுடையானூர் எம்.முகமது காலித், அழகப்பபுரம் பி.சதீஷ்குமார், குலையனேரி எ.கணேசன், கீழப்பாவூர் பி.மரகதம், பாவூர்சத்திரம் பொன்லட்சுமணன், குற்றாலம் கே.வி.வீரபாண்டியன்,வி.கே ன.புதூர் எம்.உஷா கற்பக சித்ரா, சிவலார்குளம் எஸ்.ரவி, தென்காசி கே.இசக்கி ராஜ், கிடாரக் குளம் எம் .சேர்மக்கனி, வெங்காடம் பட்டி பி ன.ராஜேஷ் கண்ணா, பாப்பான்குளம் எம்.காமாட்சி,சிவநாடானூர் வி.எம்.பிரபாகரன், தென்காசி கே.மாரிமுத்து,கீழசுரண்டை எம்.நிஷாந்த், குலையனேரி கே.ரேணுகாதேவி, பாவூர்சத்திரம் போவாஸ், நெட்டூர் கே. அப்பரானந்தம், ஊத்துமலை ஆர்.வேல்துரை, தென்காசி ஆர். மனோகரன், தென்காசி வி.எஸ். திருமலை குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இன்னலையில் தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் ஆயிரப்பேரி கே.சுந்தர் தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ். செல்வ மோகன்தாஸ் பாண்டியனை சந்தித்து கைத்தறி ஆடை அணிவித்து வாழ்த்து பெற்றார்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளர் முன்னாள் அரசு வழக்கறிஞர் ஏ. கார்த்திக் குமார், அதிமுக மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நெல்லை முகிலன், கீழப்பாவூர் ஒன்றிய அதிமுக செயலாளர் இருளப்பன் கிழப்பாவூர் பேரூர் துணைச்செயலாளர் விவேகானந்தர், மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் ராமசாமி, மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளர் மேலமெஞ்ஞானபுரம் சைரஸ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.