கள் மற்றும் பதநீர் இறக்க அனுமதிக்கோரி மதுராந்தகம்
மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையம் முற்றுகை.
செங்கல்பட்டு மாவட்டம் கள் மற்றும் பதநீர் இறக்க அனுமதிக்கோரி மதுராந்தகம்
மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையம் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
தமிழ்நாடு மரம் ஏறும் தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கம் கிராமணி நாடார் மக்கள் முன்னேற்ற சங்கம்சார்பில் செங்கல்பட்டு மாவட்டத்தில் பனைமரம்
கள் இறக்கும் 40 க்கும் மேற்பட்ட ஊராட்சிகளைச் சார்ந்த பனை மரம் ஏறும் தொழிலாளர்கள்250 க்கும் மேற்பட்டோர்கள் மற்றும் பதநீர் இறக்க அனுமதிக்கோரி,மரம் ஏறுவதற்கு பயன்பெறும் வடகயிறு, பெட்டியுடன்மதுராந்தகம் மதுவிலக்குஅமல் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு 100 க்கும் மேற்பட்டோர்கோரிக்கை மனு அளித்தனர்.
அம்மனுவில், தமிழகம் முழுவதும் பனை மரம் ஏறும் தொழிலாளர்களை காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்குவதையும்,அவர்களின் உடமைகளை சேதப்படுத்துவதையும், அவர்களை ,கள்ளு இறக்கும் குற்றப்பரம்பரையை சார்ந்தவர்களாக சித்தரிப்பதை தடுக்கவும் உரிய சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டு என கிராமணி நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின்
நிறுவன தலைவர் டாக்டர்கே.வி.எஸ்.சரவணன் கிராமணி தலைமையில்
தமிழகத்தில் கள் இறக்குவதற்கு அனுமதி வழக்கவும் மனுவில் தெரிவித்தனர்.