கொளத்தூர் காவல் மாவட்ட உதவி ஆணையாளர் செந்தில்குமார் ராஜமங்கலம் காவல் நிலையத்தில் உள்ள உதவி ஆணையாளர் அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொளத்தூர் உதவி ஆணையாளராக இருந்த சிவகுமார் என்பவர் மாரடைப்பால் காலமானார் . அதனை தொடர்ந்து ஜான்சுந்தர் உதவி ஆணையாளராக பொறுப்பேற்று , கடந்த மாதம் கூடுதல் துணை சூப்பிரண்டாக பதவிஉயர்வு பெற்று மாற்றலாகி சென்றார்.

அதன்பின் செந்தில் குமார் கொளத்தூர் பெரவள்ளூர் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து உதவி ஆணையாளராக பதவி உயர்வு பெற்றார். பின்னர் கொளத்தூர் காவல் மாவட்டத்திலேயே ராஜமங்களம் காவல் நிலையத்தில் உள்ள அலுவகத்தில் உதவி ஆணையாளராக பொறுப்பேற்றுக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் நம்மிடம் கூறும் போது இப்பகுதியில் ரௌடிசம் , கட்டப் பஞ்சாயத்து சமூக விரோத குற்றங்கள் நிகழாமல் தடுக்கப்படும் எனவும் மீறி இது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *