எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சீர்காழியில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் கிராம ஊழியர்கள் சங்கம் உள்ளிருப்பு போராட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் மாலை 3 மணி முதல் 6 மணி வரை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களது கோரிக்கைகளான வரையறுக்கப்பட்ட காலம் வரை ஊதியம் வழங்க வேண்டும். கிராம உதவியாளர்கள் யாரேனும் இறந்து விட்டால் அந்த குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும். கடந்த 2007 க்கு பிறகு பணிக்கு வந்து சிபிஎஸ் திட்டத்தில் பணி பார்த்து ஓய்வு பெற்று இறந்து போன கிராம உதவியாளரிடம் பிடித்தம் செய்த தொகையை அதற்கு உண்டான அரசு பங்கீடு இதனால் வரை வழங்கப்படாமல் உள்ளது
இதனை வழங்க வேண்டும். புதிதாக பணியில் சேர்ந்த கிராம உதவியாளர்களுக்கு சிபிஎஸ்என் நிரந்தரமாக வழங்க வேண்டும். கிராம உதவியாளர்களை கிராமப் பணிகளை தவிர மாற்றுப் பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 30 க்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள் கண்டன கோஷங்களை எழுப்பி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.