சின்னமனூரில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த சிவகாமியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ளது தேனி மாவட்டம் சின்னமனூரில் 1000 ஆண்டு பழமை வாய்ந்த சிவகாமியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நாளை திங்கட்கிழமை நடைபெற உள்ளது பணிகளை அறநிலையத்துறை யினர் நகராட்சி நிர்வாகம் போலீஸ் துறை இணைந்து முன்னேற்பாடு பணிகளை தீவிரமாக செய்து வருகின்றனர்
சின்னமனூர் மார்க் கயன் கோட்டை ரோட்டில் அமைந்துள்ள இந்த கோயிலில் சுயம்பு பூலாநந்தீஸ்வரர் உடனுறை சிவகாமி யம்மன் கோயில் அமைந்துள்ளது இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது கும்பாபிஷேகத்திற்காக கோவில் பராமரிப்பு பணிகள் கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று முடிந்தது இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்ற கூட்டத்தில் பேசினார்
இதை எடுத்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவின் பேரில் 1.50 கோடி மதிப்பீட்டில் உபயதாரர்களின் உதவியுடன் கடந்த 2 ஆண்டுகளாக பராமரித்து பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது இந்த நிலையில் நாளை சிவகாமியம்மன் கும் பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
மேலும் நகராட்சி சார்பில் நகராட்சி ஆணையாளர் கோபிநாத் நகர்மன்ற தலைவர் ஐ எம் ஆர் ராமு துணைத்தலைவர் முத்துக்குமரன் பொறியாளர் பன்னீர் புண்ணியமூர்த்தி சுகாதார ஆய்வாளர் வேல்முருகன் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் கோயில் வளாகத்தில் நடைபெற்று வரும் யாகசாலை பூஜைகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து வருகின்றனர்
இந்த கும்பாபிஷேக விழாவிற்கு தேனி மாவட்ட எஸ்பி சிவப்பிரசாத் உத்தரவின் பேரில் போடி டிஎஸ்பி சுனில் குமார் தலைமையில் சின்னமனூர் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்
இது குறித்து கோவில் செயல் அலுவலர் நதியா கூறும் போது நாளை நடைபெறும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 5 இடங்களில் வழங்கப்படும் அன்னதானத்தில் உணவுகளை ஆய்வு செய்யும் படி உணவு பாதுகாப்பு துறையினருக்கு கடிதம் கொடுத்து உள்ளேன் சிவகாமி அம்மன் உடனுறை பூ லாநந்தீஸ்வரர் கோயில் ஆயிரம் ஆண்டு பழமையான கோயிலாகும் கடந்த சில ஆண்டுகளாக திருப்பணிகள் செய்து நாளை காலை 9 முதல் 10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவிலுக்கு வெளியே மார்க்கையன்கோட்டை ரோட்டில் இரண்டு இடங்களிலும் நகருக்குள் மூன்று இடங்களிலும் அன்னதானம் நடைபெறுகிறது அன்னதானம் நடைபெறும் இடங்களையும் அன்னதானத்தில் வழங்கும் உணவையும் ஆய்வு செய்ய உணவின் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று சின்னமனூர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு கடிதம் அளித்துள்ளேன் ஆயிய கணக்கில் பொதுமக்கள். கூடுவார்கள் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கோவில் செயல் அலுவலர் நதியா தெரிவித்தார்