பாட்டாளி மக்கள் கட்சி மாநில தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான திரு அன்புமணி ராமதாஸ் எம்பி தலைமையில் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் சதாசிவம் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் மாண்புமிகு நித்தின் கட்கரி அவர்களை சந்தித்து தொப்பூர் பவானி NH -555H தேசிய நெடுஞ்சாலையில் மேச்சேரி எடுத்த எருமப்பட்டி அருகே டோல்கேட் அமைக்கும் பணியை கைவிட வேண்டும் இந்தச் சாலையை இரண்டு புறமும் 10 அடி அகலப்படுத்தி சேதமடைந்த சாலைகளை சீரமைத்த பிறகு டோல்கேட்டை அமைக்க வேண்டும் மற்றும் மேச்சேரி பேரூராட்சி வழியாக உள்ள தேசிய நெடுஞ்சாலையால் மேச்சேரி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது
இங்கு பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளதால் இதனால் நகரப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது இதற்கு மாற்றாக மேச்சேரி பேரூராட்சி பகுதியில் புரவழிச் சாலை(RING ரோடு,)அமைக்க வேண்டும் இதனால் மேச்சேரி பேரூராட்சி பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படும் என்று கோரிக்கை கடிதம் வழங்கினார்