கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் மாவட்டம் சின்ன தாராபுரம் கிராமத்தில் வன்னியர் திருவிழா நடைபெற்றது
திருவிழா வை முன்னிட்டு முதல் நிகழ்வாக ஊர் பிரமுகர்கள் மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த வன்னியர் சங்க கொடியினை
பாட்டாளி மக்கள் கட்சி யின் கரூர் மாவட்ட செயலாளர் பி எம் கே பாஸ்கரன் ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து வன்னியர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. பின்னர் மாவட்ட செயலாளர் பிஎம்கே பாஸ்கரன் அவர்களுக்கு பரிவட்டம், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற பகவதி அம்மன் திருக்கோவில் மாவிளக்கு பூஜை மற்றும் வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த நிகழ்வில் பரமத்தி ஒன்றிய செயலாளர் முனியப்பன் வன்னியர் சங்க மாவட்ட தலைவர் ரமேஷ் கரூர் ஒன்றியம் வே.விஸ்வநாதன் மாவட்ட துணை செயலாளர் முத்துக்கிருஷ்ணன் மகளிர் அணி தங்கமணி சௌந்தரராஜன் அரவக்குறிச்சி நகர தலைவர் குடியரசு இளைஞர் அணி சூரியா கார்த்திக் மாணவரணி கணேஷ் மாதவன்,கோகுல் ஊர் பிரமுகர்கள் மணி பொன்னுசாமி கிருஷ்ணன் அர்ச்சுனன் ராஜேந்திரன் உள்ளிட்ட கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.