கோவில்பட்டியில் தனியார் தினசரி சந்தை கால்கோள் விழா – சபாநாயகர் அமைச்சர் பங்கேற்பு-விழாவில் பங்கேற்காத மாவட்ட ஆட்சியர் மாவட்ட எஸ்பி மற்றும் அரசு அதிகாரிகள்
கோவில்பட்டி அருகே திட்டக்குளத்தில் தனியார் தினசரி சந்தைக்கான கால் கோள் விழா என்ற நடைபெற்றது. இந்த தனியார் தினசரி சந்தை தொடர்பாக ஸநீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவை, முறையாக அனுமதி பெறவில்லை என்று கூறி பல்வேறு அமைப்பினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஊர்வலத்தில் ஈடுபட்டனர். மேலும் தெற்கு திட்டக் குளத்தில் கிராம மக்கள் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கிடையில் இந்த விழாவில் தமிழக சபாநாயகர் அப்பாவு, சமூக நலன் மகளிர் நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விழா அழைப்பிதழில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மாவட்ட எஸ்பி கோட்டாட்சியர் உள்ளிட்டோர் பெயர்கள் இடம் பெற்றிருந்த நிலையில் அவர்கள் யாரும் விழாவில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.