செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சீர்காழியில் அதிமுகவினர் வீடு வீடாக சென்று அதிமுக ஆட்சி கால சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி ஆதரவு திரட்டினார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக அம்மா பேரவை சார்பில் மாவட்ட செயலாளர் சங்கர், மாநில துணை செயலாளர் மார்கோணி ஏற்பாட்டில் நடைபெற்ற திண்ணை பிரச்சாரத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் கலந்து கொண்டு ஈசானித்தெருவில் உள்ள எம்ஜிஆர் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து திண்ணை பிரச்சாரத்தை தொடங்கினர்.
டீ கடை,மளிகை கடை மற்றும் வீடு வீடாக சென்று அதிமுக ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை எடுத்துரைத்தும், சாதனைகளை விளக்கி துண்டறிக்கைகளை பொது மக்களிடையே வழங்கி ஆதரவை திரட்டி திண்ணைப் பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.இதில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் ஒன்றிய நகர நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்