கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இலவச திருமணம் நடைபெற்றது.
திருமணம் உதவி ஆணையர் சந்திரன் தலைமையில் மூன்று ஜோடிகளுக்கு ஸ்ரீ விருத்தகிரீஸ்வரர் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. மூன்று மணமக்களுக்கும் புரோகிதர்கள் வேதமந்திரம் ஓத பெற்றோர்கள், உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
மணமக்களுக்கு தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.
இதில் 4கிராம் திருமாங்கல்யம், மணமக்களுக்கு புத்தாடை பூ மாலை, பீரோ, குத்து விளக்கு, காமாட்சி விளக்கு கட்டில், மெத்தை,பாய், கைக் கடிகாரம், மிக்சி, பூஜை பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் உட்பட ரூபாய் 1லட்சம் மதிப்புள்ள பொருட்கள் இந்து சமய அறநிலையத்துறையால்வழங்கியது.
இதில் நிர்வாக மேலாளர் பார்த்தசாரதி, டாக்டர் முருகதாஸ் மற்றும் பொதுமக்கள், உறவினர்கள் கலந்து கொண்டு திருமணத்தை சிறப்பாக நடத்தி வைத்தனர். மணமக்களை பலரும் வாழ்தினர்.