கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520.
உதவி தலைமை ஆசிரியரை தாக்கிய சம்பவத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது செய்து பல்லடம் போலீசார் நடவடிக்கை…
மேலும் தலைமறைவாக உள்ள ஒருவருக்கு பல்லடம் போலீசார் வலை வீச்சு…
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கணபதிபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சுமார் 2000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் இந்த நிலையில் நேற்று பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது
இதை தொடர்ந்து மர்ம நபர்கள் சிலர் பள்ளியில் உள்ளே நுழைந்து மாணவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது இது குறித்து தகவல் அறிந்து பள்ளியின் உதவி தலைமை ஆசிரியரும் வேதியல் ஆசிரியருமான மாணிக்கம் மர்ம நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் இதனைத் தொடர்ந்து மர்ம நபர்கள் உதவி தலைமை ஆசிரியரை தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது
இது குறித்து மாணிக்கம் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த மர்ம நபர்களை தேடி வந்தனர் மேலும் பல்லடம் போலீஸ் சாருக்கு கிடைத்த தகவலின் பெயரில் இந்த வழக்கில் தொடர்புடைய இரண்டு சிறுவர்கள் மட்டும் மாதேஸ்வர நகரை சேர்ந்த தனபால் 21 கைது செய்து நீதிமன்றத்தில் ஆசை படுத்தி சிறையில் அடைத்தனர்
மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரை பல்லடம் போலீசார் வலை வீசி தேடி வருகின்றன. பல்லடம் அருகே அரசு பள்ளியில் உதவி தலைமை ஆசிரியரை தாக்கிய இரண்டு சிறுவர்கள் உட்பட மூவர் கைதாகி சிறைக்குச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது