கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது இந்த முகாமில் சிதம்பரம் சார் ஆட்சியர் கிஷன் குமார் பங்கேற்று மாற்றுத்திறனாளிகளின் பல்வேறு கோரிக்கை மனுவை அவரவர் இருப்பிடத்திற்கே சென்று பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து மனு மீதான கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறினார்
இதில் இலவச வீட்டு மனை பட்டா மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் உதவி தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது முகாமில் வருவாய் வட்டாட்சியர் தனபதி மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் தமிழ்ச்செல்வி உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்