கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூரில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியை முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் துவங்கி வைத்தார்.
கரூர் அருகே வெள்ளியணை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தாந்தோணி கிழக்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர்கள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சி தலைவி ஜெயலலிதா ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு தாந்தோணி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் பாலகிருஷ்ணன், சின்னக்குளம் சரவணன் தலைமையில் நடைபெற்ற கரூர் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியை கரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் சதுரங்கப் போட்டியை துவக்கி வைத்து, மாணவ மாணவியர்களை வாழ்த்தினார்.
இதில் மாணவ, மாணவிகள் 10 வயது, 13 வயது, 17 வயது உட்பட்ட 3 பிரிவுகளிலும் மற்றும் ஆண்கள், பெண்கள், பொதுப் பிரிவு என தனித்தனியாக சதுரங்கப் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட கலந்து கொண்டனர்.
இதில் வெற்றி பெறுபவர்களுக்கு கோப்பைகள், சான்றிதழ்கள் மற்றும் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்ச்சில் கரூர் மாவட்ட கழக அவைத் தலைவர் எஸ்.திருவிகா, மாவட்ட இணைச் செயலாளர் மல்லிகா சுப்பராயன், மாவட்ட கழக துணை செயலாளர் ஆலம் தங்கராஜ், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் பசுவை சிவசாமி, கிருஷ்ணராயபுரம் சட்ட மன்ற தொகுதி பொதுக்குழு உறுப்பினர் நகுல் சாமி உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழகச் செயலாளர்கள், கிளை கழக செயலாளர்கள், சார்பு அணி செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.