
பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே 12-ஆம் ஆண்டு நடைபெற்ற..
அரசு, வேம்பு திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் பங்கேற்பு…
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் உள்ள வங்காரம்பேட்டை அரசு எனும் சுவாமிக்கும், அம்பாள் எனும் வேம்புக்கும் திருக்கல்யாணம் விமர்சையாக நடைபெற்றது. விக்னேஷ்வர பூஜை, கணபதிஹோமம், பார்வதி பரமேஸ்வர ஹோமம் உள்ளிட்ட ஹோமங்களும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 108-சிவாலயத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன் கோவிலில் இருந்து திருமணத்திற்கான சீர்வரிசை பொருட்களுடன் ஏராளமான பெண்கள், சீர் தட்டுகளை எடுத்து வந்து அரசு, வேம்பு 12-ஆம் ஆண்டு திருமணம் ஆகம விதிப்படி விமர்சையாக நடைபெற்றது.
மேலும் மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருக்கல்யாண வைபவத்தில் வங்காரம்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வங்காரம்பேட்டையை சேர்ந்த கிராமவாசிகள் செய்திருந்தனர்.