சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிராகவும் மத ஒற்றுமையை வலியுறுத்தியும் காதலர் தினத்தையொட்டி யும், இரத்தத்தில் ஜாதி,மதம் இல்லை எனக் கூறி மதுரை மாநகர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்றது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை இரத்த வங்கியுடன் இணைந்து ஞான ஒளிவுபுரம் தேம்பாவணி மருத்துவமனையில் நடைபெற்ற இந்த இரத்த தான முகாமில் சாதி மறுப்பு காதல் திருமணம் செய்து கொண்ட 20க்கும் மேற்பட்ட தம்பதிகள் மற்றும் இளைஞர்கள் இரத்த தானம் செய்தனர்.
இந்நிகழ்ச்சியை மதுரை மாநகர் துணைமேயர் நாகராஜன் துவக்கி வைத்தார். சி.ஐ.டி.யு மாநிலத் துணைச் செயலாளர் எஸ்.கண்ணன்,யூ டியூபர் மைனர் சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர், இரா.லெனின் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில பொருளாளர் பாரதி,ஆகியோர் இரத்த தானம் செய்த தம்பதிகளை வாழ்த்தி சான்றிதழ் வழங்கினர்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் செல்வா, மாவட்ட தலைவர் பாவல் சிந்தன்,மாவட்ட பொருளாளர் வேல் தேவா, மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மேலும் சில அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டு கேக் வெட்டி காதலர் தினத்தை கொண்டாடினர்.