காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யும் இடத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளதால் பதற்றம்…விழா குழுவினர் முறையான ஏற்பாடுகள் செய்யாததால் கால்நடைகளுக்கும் காயம்…

செய்தி சேகரித்த செய்தியாளர்கள் மீது விழா குழுவினர் தாக்க முயற்சித்ததால் பரபரப்பு…

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அழகுமலையில் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் அழகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்க விழா குழுவினர் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது சுமார் 800 காளைகள் பங்கேற்றுள்ளன மேலும் 600 மாடுபிடி வீரர்கள் போட்டியில் காளைகளை அடக்க கலந்து கொண்டுள்ளனர் 10 சுற்றுகளாக நடைபெற்றுள்ள போட்டியில் ஒரு சுற்றுக்கு 50 மாடு பிடி வீரர்கள் விதம் உரிய மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

அதேபோன்று காளைகளும் உரிய பாரிசோதனைக்கு பின் வாடிவாசலுக்குள் அனுமதிக்கப்படுகிறது இந்நிலையில் 10 சுற்றுகள் இதுவரை முடிவு அடைந்துள்ள நிலையில் 580 காலைகள் போட்டியில் பங்கேற்று உள்ளன இன்னும் 200க்கும் மேற்பட்ட காளைகள் உள்ளே அனுமதிக்கப்படாமல் உள்ள நிலையில் 5 மணிக்குள் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடையும் என விழா குழுவின் தெரிவித்துள்ளனர்

சிவகங்கை திண்டுக்கல் மதுரை போன்ற பகுதிகளில் இருந்து காளைகள் கொண்டு வந்த அதன் உரிமையாளர்கள் தங்களது காளைகளையும் அனுமதிக்க வேண்டும் என போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் காளைகளை பரிசோதனை செய்யும் இடத்தில் காலை உரிமையாளர்கள் ஒரே இடத்தில் திரண்டதால் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது பயத்தில் மிரண்ட சில காளைகள் அங்கிருந்தவர்கள் மீது பாய்ந்து பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் டோக்கன் வழங்கப்பட்ட காளைகளை கூட வாடி வாசலுக்குள் விடாமல் ஜல்லிக்கட்டு போட்டி முடிவடைய உள்ளதாகவும் விழா குழுவினர் முறையாக எந்த ஏற்பாடுகளையும் செய்யாததால் கால்நடைகளுக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது மேலும் காலை உரிமையாளர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி வருகின்றனர் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை விழா குழுவினர் தாக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *