பாபநாசம் செய்தியாளர் ஆர் .தீனதயாளன்
பாபநாசத்தில் சாலையோரம் குடியிருந்து வரும் குடும்பங்களுக்கு மாற்றுக்கருடன் வழங்காத வருவாய்த்துறை , நெடுஞ்சாலை துறைகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியினர் உணவு சமைத்து உண்டு உறங்கும் தொடர் காத்திருப்பு போராட்டம்…..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அண்டக்குடி கிராமத்தில் திருவையாறு – கும்பகோணம் நெடுஞ்சாலையில் நீண்ட காலமாக சாலையோரம் குடியிருந்து வரும் குடும்பங்களுக்கு மாற்று இடம் வழங்காத வருவாய்த்துறையை கண்டித்தும், குடியிருப்பவர்களை அகற்ற முற்படும் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட்) கட்சியின் சார்பில் ஒன்றிய செயலாளர் முரளிதரன் தலைமையில் உணவு சமைத்து உண்டு உறங்கும் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் சென்னை பாண்டியன் மாவட்ட குழு உறுப்பினர் இளங்கோவன் மாநில குழு சிறுபான்மை மக்கள் நலக்குழு காதர் உசேன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்.
இதில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் செல்வகுமார் ,கஸ்தூரி, அன்னக்கிளி, மகேந்திரன் ராமதாஸ், மற்றும் பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு உணவு சமைத்து உண்டு உறங்கும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.