மயிலாடுதுறையில் வேலை செய்து கொண்டிருந்தபோது விபத்தில் முதுகுத்தண்டு வடம் முறிந்து பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்த குடும்பத்தினருக்கு தமிழக வெற்றி கழகம் சார்பாக தொழில் செய்ய பெயிண்டிங் கம்ப்ரசரை மாவட்ட செயலாளர் வழங்கி ஊக்குவிப்பு:-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சேந்தங்குடி வடபாதி தெருவில் மாவீரன் என்பவர் மனைவி தமிழரசி மற்றும் மூன்று மகன்கள் உடன் வசித்து வருகிறார். மாவீரன் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு பெயிண்டிங் வேலை செய்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் முதுகு தண்டு வடம் உடைந்து பாதிக்கப்பட்டார்.

நடக்க முடியாத மாற்றுத்திறனாளியாக மாறி வாழ்வாதாரம் இழந்து குடும்பத்தினர் தவித்து வந்தனர். இதனை அறிந்த தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் குட்டி கோபி அறிவுறுத்தலின் பேரில் செம்பனார் கோயில் ஒன்றிய நிர்வாகி மணிகண்டன், குன்னம் விக்கி ஏற்பாட்டில் 17500 ரூபாய் மதிப்பீட்டில் மாவீரன் தொழில் செய்வதற்கு ஏதுவாக பெயிண்டிங் கம்பர்சர் கொடையாக வழங்கப்பட்டது.

மாவட்ட செயலாளர் குட்டி கோபி நேரடியாக வந்து பெயிண்டிங் கம்ப்ரசரை வழங்கி தொழில் செய்து முன்னேறுமாறு ஊக்கமளித்தார். தங்கள் செலவிலேயே தொழில் செய்ய கடை வைப்பதற்கு முன்பணம் அளித்து உதவுவதாகவும் அப்போது அவர்கள் தெரிவித்தனர். இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் அறிவரசன் செம்பை ஒன்றிய நிர்வாகி சந்தோஷ், எருமல் நடராஜ், ஹரிஷ் அபி, அப்பு ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *